Articles

Home | Articles

திருக்குறளில் வரும் பொருளதிகாரம், மனுதர்மம் மற்றும் அர்த்தசாஸ்திரத்தில் வரும் அரசருக்குரிய தர்மத்தில் சில வன்முறையையும், அதர்ம வழிமுறைகளையும் சொல்லப்படுகிறது, அப்படி என்றால்  இந்துமதம் அதர்மத்தையும், வன்முறையையும் போதிக்கிறதா? 

வேதத்தில் கூறப்பட்டிருக்கும் நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு ஆசிரமங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்கு இந்தக் கேள்வி மிகவும் உற்சாகம் அளிக்கிறது, நன்றி ஐயா.

தங்கள் கேள்விக்கான பதிலை அடியேனின் வர்ணாஸ்ரம தர்மம் தொடர்பான புரிதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

வர்ணாஸ்ரம தர்மத்தின் நுட்பங்கள் குறித்த அறிவே வேதப் பொக்கிஷங்களை திறக்க உதவும் சாவி என்பது அடியேனின் புரிதல், அடியேன் அறிந்தவரையில் வர்ணாசிரம தர்மங்களை முழுமையாக புரிந்துகொள்ளாமல், வேதம் பயில நுழைவதே ஆபத்தானது. "வர்ணாஸ்ரம தர்மத்தை புரிந்து கொண்டு மேலே படிக்க நுழை" என்று பரிமேலழகர் பெருமான் அவர் தம் திருக்குறள் உரையின் உரைப்பாயிரத்தில் கோடிட்டு காட்டியுள்ளார். 

உயர்ந்தோரின் உரைபாயிரத்தை புரிந்து கொள்ளாமலேயே, திருக்குறளை மனப்பாடம் செய்ய  ஆரம்பித்து விடுகிறோம், இது சாவி எடுக்காமல் போய் பூட்டை பிடித்து தொங்கி கொண்டு இருப்பது போலாகும், சில நூற்றாண்டுகளாக கல்வியை திணிக்கும் பாடதிட்டத்தின் அடிப்படையில் அல்லவா நாம் படித்தது கொண்டிருக்கிறோம்.

அடிப்படைப் புரியாமலேயே உயர்கல்விக்கு செல்வது குழப்பத்திற்கே வழிவகுக்கும்,  புரியாதது குற்றமே அல்ல, இயல்பு. தவறாக புரிந்து கொள்வதுவே கற்கும் கல்விக்கு செய்யும் துரோகம். நாம் தான் தற்போது ஒன்றாம் வகுப்பு பாடமே புரியாத பிள்ளையை இரண்டாம்  வகுப்பில் தூக்கிப் போடும் சமுதாயத்தில் அல்லவா இருக்கிறோம், படித்தது புரிந்தபின் மேலே படி எனும் நம் வேத கல்வி முறையை மறந்து விட்டோம். 

கேள்வி பிறக்க வேண்டிய இடத்தில் வந்து பாடத்தை நிறுத்துவார்கள் சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து கேள்வி பிறக்காத வரை மேற்படி பாடத்தை தொடங்க மாட்டார்கள் நல்லாசிரியர்கள். 

இனி தங்கள் கேள்விக்கான பதிலின் அருகே செல்வோம். 

மனிதர்களை  குணம் (பிராமன, சத்திரிய, வைசிய, சூத்திர)  மற்றும் பருவத்தின் / ஆசிரமம் (பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) அடிப்படையில் பிரிக்காமல் சிறப்பு தர்மங்கள் சொல்வது சாத்தியமில்லை, நான்கு வர்ணங்களுக்குரிய சிறப்பு தர்மங்களை நான்கு வர்ணத்தவரும் தெரிந்து வைத்திருந்த காலம் வரை மனிதர்களால் வர்ணாஸ்ரம தர்மத்தை உணர்ந்து கடைபிடிக்க முடிந்தது, வர்ணங்களின் பெயரை என்று மனிதன் குலங்களின்(சாதி) பெயராக மாற்ற ஆரம்பித்தானோ, அன்றையிலிருந்து தான் வருணாசிரம தர்மங்கள் சர்ச்சைக்குள்ளாகிற்று.

வேதத்தின் நுட்பங்களையும், வர்ணங்களின் சிறப்பு தர்மங்களை கிரகித்துக்கொள்ளும் சக்தி பிராமன, சத்திரிய, மற்றும்  வைசிய வர்ணத்தை  சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும், அதிலும் மிக நுட்பமானதை  பிராமன, மற்றும்  சத்திரிய வர்ணத்தாரால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும், பிராமன வர்ணத்தாரால் மட்டுமே தான் வேதத்தை அறிந்து கொள்வதிலும் தர்மங்களை புரிந்து கொள்வதிலும் முழுமை பெற முடியும்.

தாங்கள் எழுப்பிய கேள்வி,  இந்த காலத்தில் அனைத்து வர்ணத்தவரும் அனைத்து வர்ணாஸ்ரம தர்மங்களையும் "வாசிக்க" புத்தக வடிவில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் எழுகிறது. நமக்குத் தெரிந்த மொழியில் இருப்பதால் மட்டும் ஒரு படைப்பாளிகளின் கருத்தை முழுமையாக புரிந்துகொண்டு விட முடியாது. தர்மத்தையும்‌ அந்தப் படைப்பாளியையும் உள் வாங்குவதால் மட்டுமே அது சாத்தியமாகிறது.

வைத்தியனுக்கு உரிய  பாடமும், சட்டமும்  எப்படி  பொறியியல் படிப்பவருக்கு பொருந்தாதோ,  சத்யரினுக்கு உரிய தர்மம், பிராமணனுக்கு தேவையில்லை, வைசியனுக்கும், சூத்திரனுக்கும் பொருந்தாது, இயல்பும் அல்ல.

"தர்மத்தை காக்க சில குறுக்கு வழிகளையும் மேற்கொள்ளலாம்" என்பது கிருஷ்ண பகவானின் வாக்கு, இது மேலோட்டமாகப் பார்த்தால் அனைத்து வர்ணத்தவருக்கும் பொருந்தும்,  ஆனால் எந்த வர்ணத்தவர்க்கு எதுவரை தர்மம் என்பது மிகவும் நுட்பமானது, இங்கே அதை சில வரிகளில் விளக்குவது என்பது என்னைப் போன்ற சிறியோனுக்கு  சாத்தியமல்ல.

அனைத்து வர்ணத்தவரையும், அவர்தம் தர்மத்தையும் காப்பது சத்திரிய தர்மம். தாங்கள் கூறிய திருக்குறள் பொருளதிகாரத்தில் உள்ள சிறப்பு தர்மம் எல்லாம் அறநெறி நின்று அரசாலும் சத்ரியனுக்ரியது, சத்திரிய தர்மத்தை காக்க அரசனுக்கு "சில சிறப்பு அதிகாரம்" வழங்கப்பட்டிருக்கிறது. அதை பிராமணனும் சத்திரியனும் அறிந்துகொண்டால் போதும். மற்ற இரு வர்ணத்தவர் தெரிந்து கொள்வதால் எந்த குற்றமுமில்லை,  முயற்சித்தால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது போய் தர்மத்தை குறை கூற நேரிடலாம்.

மக்களில் பெரும்பான்மையினர் சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவராவர் (இறைவனின் அணைப்பில் இருப்பவர்கள் என்று சொல்லலாம்) இவர்களுக்கு எளிமையான தர்மம் மற்றும் கடமை மட்டுமே போதிக்கப்பட்டிருக்கிறது. சூத்திர என்றால் அடிப்படை என்று அர்த்தம்,  இப்பொழுது அதற்கு அர்த்தம் சில பொய்யர்களால் கீழானது என்று கற்பிக்கப்பட்டு வருகிறது, அடிப்படை எப்படி கீழானதாகும்? அடிப்படை கீழாதேன்றால், பட்டப்படிப்புக்கு ஒன்றாம் வகுப்பு அடிப்படை, அது கீழானதாகுமா ஆகுமா? அவ்வையின் வாக்கு " இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர்" இதுபோல் பல உதாரணம் சொல்லமுடியும்.  

வர்ணாசிரம  தர்மம் தொடர்பான தவறான புரிதலே தற்போது ஏற்பட்டிருக்கும்  அனைத்துக் (ஆத்திக மற்றும் நாத்திக) குழப்பங்களுக்கும் அடிப்படை காரணம். 

அறிவியலும், பொருளாதாரமும் வெவ்வேறு வகுப்புகளில் நடத்தப்படுவது மாணவர்கள் தகுதி வேறுபாடு காரணமாக அல்ல, பாடம் வேறுபாடு காரணமாகத்தான்.  அதேபோல்  வர்ணாஸ்ரம தர்மம்  எனப்படுவது தனி மனித சக்தி மற்றும் இயல்புக்கு ஏற்ற தர்மத்தை பிரித்து சொல்வதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, மக்களுக்குள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த உருவானதல்ல.

மூன்று அதிகாரத்தில் "அறம்" அனைத்து வர்ணத்திற்கும் பொதுவான, மற்றும் சூத்திர வருணத்தாருக்கு போதுமான அனைத்து தர்மங்களையும் போதித்து விட்டது, பொருள் மற்றும் இன்பம் என்ற அதிகாரத்தில் வரும் பெரும்பாலான தர்மங்கள் பிராமண, சத்திரிய மற்றும் வைசிய‌ வர்ணத்துக்கு உரியதாகிறது.

தன் வர்ணத்துக்கு பொருந்தாத தர்மங்களை தக்க குருவின் துணையில்லாமல் "வாசித்தால்" குழப்பமே மிஞ்சும்.

வர்ணத்துக்குரிய இயல்புடன் இருப்பதனால்தான் ஒருவன் பிராமணனாகவோ சத்திரியனாகவோ வைசியன்கவோ அறியப்படுகிறான் அல்லாமல் "நான் மந்திரம் ஓதுகிறேன், அதனால் நான் பிராமண வர்ணத்தை சேர்ந்தவன், நான் அரசியல்வாதி அதனால் சத்ரிய வர்ணத்தை சேர்ந்தவன், நான் வியாபாரம் செய்கிறேன் அதனால் நான் வைசிய வர்ணத்தை சேர்ந்தவன் என்பதை முழுமையாக ஏற்க இயலாது,  வர்ணத்துக்கு உரிய இயல்பு/கடமை இது தான், ஆனால் பெரும்பாலானோர் இத்துறைகளில் சூழ்நிலை காரணமாகவே இருக்கிறார்கள்,  இயல்பு மற்றும் சுய விருப்பத்தால் இத்துறைகளை அடைபவர்களே அந்தந்த வர்ணத்துக்குரியவர்களாக அறியப்படுகிறார்கள். 

அவர்களால்தான் அந்தந்த வர்ணத்துக்குரிய சிறப்பு தர்மங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும், மற்றும் அந்தந்த வர்ணத்துக்குரிய துறையில் முழுமை பெற/சாதிக்கவும் முடியும்.

இரு வீட்டாரும் நடுவே உள்ள பகை வேறு, இரு நாட்டு மன்னர்கள்குள்ளிருக்கும் பகை வேறு,  முதற் பகையால் இவ்விரு வீட்டார் தவிர வேறு எவரும் பாதிக்கப்படப் போவதில்லை. இங்கே பார்க்கவேண்டிய தர்மம் வேறு. ஆனால் இரு நாட்டு மன்னர்கள்குள்ளிருக்கும் பகை வேறு, மன்னர்களுக்குள் இருக்கும் பகை அந்தந்த நாட்டின் அத்தனை பிரஜைகளின் தர்மம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இங்கே பார்க்கவேண்டிய தர்மம் வேறு, வழிமுறையும் வேறு, அவசியமும் வேறு. 

சத்ரியனுகுறிய தர்மத்தை மட்டுமே மேலோட்டமாக படித்துவிட்டு, இந்துமதம் அதர்மத்தையும், வன்முறையையும் போதிக்கிறது என்று முடிவுக்கு வருவது மிகவும் தவறு.    

வணக்கம்

Register With Us

If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.

  • Mobile: +91 9841244236
  • Email: kumar@dharmam.in
  • Register Now